சைவசித்தாந்த சான்றிதழ் படிப்பு

இரண்டாம் நிலை: சிவநாற்று

பட்டம் - "சிவசீடன்"

அ. விநாயகர் துதி

பாடல்: 1

வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்

பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க

ஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்

யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்

- சேக்கிழார் ஸ்வாமிகள்

பாடல்: 2

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா.

- ஒளவையார்

பாடல்: 3

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடி கணபதி வர அருளினன் மிகுகொடை

விடிவினர் பயில் வலிவல உறை இறையே

- சம்பந்தர்

பாடல்: 4

நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்

தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்

செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே

பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம்.

- கந்தர் அநுபூதி

பாடல்: 5

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர விண்மனி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.

- கந்த புராணம்

பாடல்: 6

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்

கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்

பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்

பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.

- விருத்தாசல புராணம்

பாடல்: 7

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.

- மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

ஆ. சிவன் துதி

பாடல்: 8

அரியானை அந்தணர் தம் சிந்தை யானை

அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனை தேனைப் பாலைத்

திகழ் ஒளியை தேவர்கள்தம் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானை பெரும்பற்றப் புலியூரானை

பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பாடல்: 9

அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?

தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு

எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.

விளக்கம்:

தில்லை மாநகரில் மேவும் சிற்றம்பலத்தை இடமாகக் கொண்டு விளங்குகின்ற நடராசப் பெருமானுக்கு, எல்லை இல்லாத அடிமை பூண்ட எனக்கு, அல்லல் இல்லை; அரிய வினையாகிய பிராரத்த வினையால் நேரக்கூடிய துன்பமும் இல்லை. தொன்று தொட்டுப் பிறவிகள் தோறும் சேர்ந்து பற்றிய சஞ்சித கன்மமும் என்னை எதுவும் செய்யாது.

பாடல்: 10

ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்,

திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்,

விருத்தனார இளையார் விடம் உண்ட எம்

அருத்தனார் அடியாரை அறிவரே.

விளக்கம்:

ஈசன், ஒப்பற்ற ஒருவராய் விளங்குபவர், உலகங்களுக்கு எல்லாம் சோதியாய்த் திகழ்பவர். செம்மை யுடையவராய் விளங்கி யாவற்றினையும் திருக்குறிப்பால் இயக்குபவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் உரியவர்; விருத்தராகவும் இளமையுடையவராகவும் திகழ்பவர், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு உலகைக் காத்தருளியவர்; எமக்கு மெய்ப்பொருளாக இருப்பவர். அப்பெருமான், அடியவர் பெருமக்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவார்.

பாடல்: 11

விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு

எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா

கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்

துள் நிறைந்து நின்று ஆடும் ஒருவனே.

விளக்கம்:

விண்ணில் நிறைந்து நின்ற பேரழலாகிய ஒரு வடிவமானது, எண்ணத்தில் நிறைந்து ஏத்தி மேவிய திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் அறிவு கொண்டு அறியமுடியாதவாறு திகழ்ந்தது. அப்பொருள், கண்ணுக்கு நிறைந்து குளிர்ச்சிமிக்க நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்து விளங்கும் தில்லை அம்பலத்தில் நின்று என் உள்ளம் நிறைந்து நின்று திருநடனம் புரியும் நடராசப்பெருமானே ஆகும்.

பாடல்: 12

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ

எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா

முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற

அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.

விளக்கம்:

அநாதியான வினையின் நீங்கியவனே! எல்லாருக்கும் முற்பட்டவனே! தில்லை அம்பலத்தே ஆடுகின்ற தலைவனே! மேம்பட்டவனே! மேம்பட்ட யோகியே! அடியேன் பத்தனாய்ப் பாடும் ஆற்றல் இல்லேன். யாதனால் அடியேன் பத்தி செய்வேன்? அடியேனை நீ இகழவேண்டா. அடியேன் உன் ஆடலைக் காணத் தில்லை வந்துள்ளேன்.

பாடல்: 13

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே

வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனே நீ

மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே

அஞ்செலாள் காண நின்று அழக நீ ஆடும் மாறே.

விளக்கம்:

தேவர்கள் தலைவனே! அடியேனுடைய நெஞ்சினைத் தூய்மை செய்து உன்னை எப்பொழுதும் அடியேன் நினைக்குமாறு திருவுள்ளம் பற்றாமல் வஞ்சனை செய்கின்றாயே. மேகங்கள் தங்குதற்கு வந்து சேரும் உடயரமான சோலைகளையுடைய தில்லையம்பதியிற் சிதம்பரத்திலே அழகிய சொற்களையுடைய பார்வதிக்கான நீ ஆடுந்திறம் இருந்தவாறு என்னே!

பாடல்: 14

மண்ணுண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும்

விண்ணுண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார்

திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே

பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் மாறே.

விளக்கம்:

பூமியை உண்ட திருமாலும், மலர்மேலுறையும் பிரமனும் விண்ணளவும் ஒளிநிறைந்த உன் திருவுருவைக் காணும் வேட்கையராயிருந்துமே, தானாக நிலைத்துத் திணிந்திருக்கும் சிவத்திரு மேம்பட்ட தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே பண்ணுக்கு அமைந்த பாடல் ஒலிகளின் இடையே பரம்பொருளாகிய நீ வெளிப்படையாக ஆடுமாற்றை, அதன் மாண்பை (இன்னும்) காணமாட்டாராகின்றனர்.

பாடல்: 15

எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி!

எரிசுடராய் நின்ற இறைவா போற்றி!

கொல்லார் மழுவாட் படையாய் போற்றி!

கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி!

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி!

கற்றார் இடும்பை களைவாய் போற்றி!

வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி!

வீரட்டம் காதல் விமலா போற்றி!

பாடல்: 16

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி!

பல்லூழி ஆய படைத்தாய் போற்றி!

ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி!

உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி!

காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி!

கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி!

ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி!

அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி!

பாடல்: 17

முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி!

முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி!

எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி!

ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி!

சில்லை சிரைத்தலையில் ஊணா போற்றி!

சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி!

தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி!

திருவீரட்டானத்து எம் செல்வா போற்றி!

பாடல்: 18

சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி!

தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி!

கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்

குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி!

பாம்பும் மதியும் புனலும் தம்மில்

பகைதீர்த்து உடன் வைத்த பண்பா போற்றி!

ஆம்பல் மலர்கொண்டு அணிந்தாய் போற்றி!

அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி!

பாடல்: 19

நீறு ஏறு நீலமிடற்றாய் போற்றி!

நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி!

கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி!

கோளரவம் ஆட்டும் குழகா போற்றி!

ஆறு ஏறு சென்னி உடையாய் போற்றி!

அடியார்கட்கு ஆர்முதம் ஆனாய் போற்றி!

ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி!

இருங்கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி!

பாடல்: 20

பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி!

பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய் போற்றி!

வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி!

வேழத்து உரி வெருவப் போர்த்தாய் போற்றி!

நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி!

நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி!

ஆடும்ஆன் ஐந்தும் உகப்பாய் போற்றி!

அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி!

பாடல்: 21

மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி!

மால்கடலும் மால்விசும்பும் ஆனாய் போற்றி!

விண்துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி!

வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி!

பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி!

பார்முழுதும் ஆய பரமா போற்றி!

கண்துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி!

கார்க்கெடிலம் கொண்ட கபாலீ போற்றி!

பாடல்: 22

வெஞ்சினவெள் ஏறூர்தி உடையாய் போற்றி!

விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி!

துஞ்சாப் பலிதேரும் தோன்றால் போற்றி!

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி!

நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி!

நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி!

அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி!

அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி!

பாடல்: 23

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி!

சீபர்ப்பதம் சிந்தை செய்தாய் போற்றி!

புந்தியாய்ப் புண்டரிகத்து உள்ளாய் போற்றி!

புண்ணியனே போற்றி! புனிதா போற்றி!

சந்தியாய் நின்ற சதுரா போற்றி!

தத்துவனே போற்றி! என் தாதாய் போற்றி!

அந்தியாய் நின்ற அரனே போற்றி!

அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி!

பாடல்: 24

முக்கணா போற்றி! முதல்வா போற்றி!

முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி!

தக்கணா போற்றி! தருமா போற்றி!

தத்துவனே போற்றி! என் தாதாய் போற்றி!

தொக்கணா என்று இருவர் தோள் கைகூப்ப

துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய் போற்றி!

எக்கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி!

எறிகெடில வீரட்டத்து ஈசா போற்றி!

பாடல்: 25

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி!

கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி!

அற்றவர்கட்கு ஆர்முதம் ஆனாய் போற்றி!

அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி!

மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி!

வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி!

செற்றவர்தம் புரம் எரித்த சிவனே போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 26

வங்கமலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி!

மதயானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி!

கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி!

கொல் புலித்தோல் ஆடைக் குழகா போற்றி!

அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி!

ஆலமர நீழல் அறம் சொன்னாய் போற்றி!

செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 27

மலையான் மடந்தை மணாளா போற்றி!

மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி!

நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி!

நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி!

இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி!

ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி!

சிலையால் அன்று எயில்எரித்த சிவனே போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 28

பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி!

பூதப்படை உடையாய் போற்றி போற்றி!

மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி!

மறியேந்து கையானே போற்றி போற்றி!

உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி!

உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி!

சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 29

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி!

நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி!

வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி!

வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி!

துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி!

தூநீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி!

செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 30

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி!

சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி!

பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி!

புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி!

அங்கமலத்து அயனோடு மாலும் காணா

அனல் உருவா நின்பாதம் போற்றி போற்றி!

செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 31

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி!

வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி!

கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி!

குரைகழலால் கூற்று உதைத்த கோவே போற்றி!

நம்புமவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றி!

நால்வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி!

செம்பொனே மரகதமே மணியே போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 32

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி!

உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி!

வள்ளலே போற்றி! மணாளா போற்றி!

வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி!

வெள்ளை ஏறேறும் விகிர்தா போற்றி!

மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி!

தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 33

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி!

புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி!

தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி!

திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி!

சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி!

சங்கு ஒத்த நீற்று எஞ்சதுரா போற்றி!

சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 34

பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி!

பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி!

கரம்நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி!

காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி!

அருமந்த தேவர்க்கு அரசே போற்றி!

அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்

சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி!

திருமூலட்டானனே போற்றி போற்றி!

பாடல்: 35

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி!

மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி!

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி!

ஓவாத சத்தத்து ஒலியே போற்றி!

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி!

ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 36

ஞானிகட்கு அறிவே ஆனாய் போற்றி!

நான்கு வேல் கண்ணியாய் நின்றாய் போற்றி!

வானிலெல்லாம் ஒருவனே போற்றி!

மாயனார்க்கு ஆழிய ருளினாய் போற்றி!

தானில் எல்லாம் தானாய் நின்றாய் போற்றி!

தத்துவனே போற்றி! தருமா போற்றி!

கானில் எல்லாம் குரல் ஆனாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 37

நெடியாய் வலியாய் நின்றாய் போற்றி!

நெற்றிக்கண்ணால் காம னெரித்தாய் போற்றி!

படியாகும் எங்கும் பரந்தாய் போற்றி!

பற்றலருக்கு எளிதாகி நின்றாய் போற்றி!

மடியாமே ஆள்வேன் என்றாய் போற்றி!

வான்கடலில் வைத்த நீறே போற்றி!

கொடியாகி நீண்ட கோவே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 38

தளிர்ப்பாகி மரங்கட்கு நின்றாய் போற்றி!

தத்துவனே போற்றி! தருமா போற்றி!

வளர் ஞானியர்க்கு அறிவே போற்றி!

வள்ளலே போற்றி! மைந்தா போற்றி!

குளிர்கங்கைச் சென்னி குழகா போற்றி!

கூத்தாடும் நாதா போற்றி போற்றி!

கொளிர் பூதத்து அரசே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 39

வித்தாகி யாவும் விளைத்தாய் போற்றி!

வேட்கை எல்லாம் தீர்ப்பாய் போற்றி!

புத்தியினால் அறிவரிய புண்ணியனே போற்றி!

பூ நிறைந்த சடைக் கலையே போற்றி!

சித்திகட்குச் சித்தி அளிப்பாய் போற்றி!

திகழ்கின்ற கண்ணுதலே போற்றி!

கத்தும் புலிப் பரிக் கேதனே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 40

மின் ஒத்த வடிவுடையாய் போற்றி போற்றி!

விமலனே போற்றி! விகிர்தா போற்றி!

கன்ன லிலாய் கலந்து நின்றாய் போற்றி!

கங்கைச் சடையனே போற்றி போற்றி!

மன் ஒத்த கற்று நின்றாய் போற்றி!

மாயனார்க்கு ஆழி அளித்தாய் போற்றி!

உன்னைவி டாமே கண்டு நின்ற ய்போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 41

ஊனைத்தின்று உயிராக்கி நின்றாய் போற்றி!

உபகாரியே போற்றி! பண்ணாளனே போற்றி!

கானில்எல்லாம் கலந்து நின்றாய் போற்றி!

கங்கைச் சடையனே போற்றி போற்றி!

யானுன்னை மறந்தாலும் நினைவிருப்பாய் போற்றி!

இங்கித நினைவுக்கு எல்லையே போற்றி!

மானில் எல்லாம் நிறைந்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 42

ஓம் என்னும் நற்சொலே ஆனாய் போற்றி!

உணர்வானும் உணர்வாகி நின்றாய் போற்றி!

ஈம் என்று யான் உரைக்கும் எல்லாம் போற்றி!

இனிய வடிவிலும் கலந்தாய் போற்றி!

யாம் என்று வையும் இலக்கண மாய் நின்றாய் போற்றி!

இன்பமாய் அன்பமாய் நின்றாய் போற்றி!

காமரு பூங்கொன்றை சூடும் கோவே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 43

விரி கங்கை மூர்த்தி விகிர்தா போற்றி!

மேலோரும் கீழோரும் காணா வித்தே போற்றி!

நெறியாகும் எங்கும் நின்றாய் போற்றி!

நெற்றிக்கண்ணால் காமன் எரித்தாய் போற்றி!

ஒரியாத மலர்ப் பூங்கொன்றைச் சூடும் போற்றி!

உண்ணாத பசித்திறும் நோவா போற்றி!

கரியான் மடக்கிய சேவடியாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 44

ஓங்கிய வெள் எருதேறும் ஊர்வே போற்றி!

உருகாத உள்ள மிருக்கி நின்றாய் போற்றி!

வாங்கிய வில்லால் அன்று முரம் நெரித்தாய் போற்றி!

வையம் எல்லாம் ஆய மைந்தா போற்றி!

ஏங்கிய என் உள்ளத்து இருப்பாய் போற்றி!

எண்ணிலொடு தோற்றம் ஆனாய் போற்றி!

கங்கைச் சடையின் கலையே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 45

வெண்பிறைச் சடையினாய் போற்றி போற்றி!

வேதமே போற்றி! விகிர்தா போற்றி!

செண்பக முகத்தினாள் பாகத்து நின்றாய் போற்றி!

சிறுமாமன் நென்னை ஆண்டாய் போற்றி!

குண்பள்ள மிடும் கொடி யெல் லாம் ஆனாய் போற்றி!

கூர்நட னின்பம் நல்கு வாய் போற்றி!

விண்பணை கடலணை விரிந்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 46

திருமேனி நீலமிடற்றாய் போற்றி!

தெள்ளிய சங்கரனே போற்றி!

பருமானும் நான்முக னும் காணா போற்றி!

பவளம் ஒத்த பதமே போற்றி!

கரு மேகம் ஒத்த கலையே போற்றி!

கலையாகும் எங்கும் நின்றாய்,திருமாலுக்கு அருள் செய்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 47

எண்ணம் எல்லாம் ஆனாய் போற்றி!

இங்கே அங்கே நிறைந்தாய் போற்றி!

கண்ணால் காணும் கருமம் எல்லாம் போற்றி!

காத லால் என்னை ஆண்டாய் போற்றி!

மண்ணால் என்னை மடுத்த மைந்தா போற்றி!

வாயால் நின்பால் வரவே போற்றி!

விண்ணால் என் உள்ளம் விளங்கும் வித்தே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 48

பூத கணம் நடப்பாய் போற்றி!

புண்ணியனே போற்றி! புனிதா போற்றி!

நீதமுறு குணத்தீராய் போற்றி!

நெற்றியில் ஒரு கண் ஆகி நின்றாய் போற்றி!

சாத கமும் பயனும் ஆனாய் போற்றி!

தத்துவனே போற்றி! தருமா போற்றி!

காதல் கொண்டேன் நின்னைப் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 49

மூவுலகுக்கும் மூல மாய் நின்றாய் போற்றி!

முக்கணனே போற்றி! மூர்த்தி போற்றி!

தாவுலகின் தன்மை தானே போற்றி!

தத்துவனே போற்றி! தருமா போற்றி!

பாவுலகின் பதியே போற்றி!

பண்ணமுதம் போற்றி! பண்ணாளனே போற்றி!

கோவுலகின் கோவே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 50

தருமம் ஆகித் தானாய் நின்றாய் போற்றி!

தத்துவனே போற்றி! தருமா போற்றி!

பரிமாணம் கண்டிலேன் பண்ணாளனே போற்றி!

பார்வை செய்த பதமே போற்றி!

கருமாறு கூறி கண்டாய் போற்றி!

கரு வாய் நிறைந்திருக்கும் கலையே போற்றி!

திரு மாலுக்கு அருள் செய்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 51

பொருத் தென் சடையினாய் போற்றி!

புண்ணியனே போற்றி! புனிதா போற்றி!

இருக்கும் தலத்தின் இறையே போற்றி!

என்னுள் இருக்கும் இனியாய் போற்றி!

கருத்தால் என்னைக் கண்டாய் போற்றி!

கண்ணால் எல்லாம் காண்பாய் போற்றி!

திருத்தால் என்னைத் திறப்பாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 52

கொலைப் புலித் தோல் அணிந்தாய் போற்றி!

கூத்தன் போற்றி! குலையனே போற்றி!

நிலைப்பு என்னும் நிலை ஆனாய் போற்றி!

நீதி என்னும் நிதியே போற்றி!

தலைப்பில் நின்பம் தருவே போற்றி!

தத்துவனே போற்றி! தருமா போற்றி!

கலைப்படம் ஆடும் கரித்தே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 53

அங்கம் ஆறே ஆனாய் போற்றி!

ஆறுமுகனைப் பயந்தாய் போற்றி!

பொங்கும் எறும்பின் பொருளே போற்றி!

பூரண மே போற்றி! புனிதா போற்றி!

செங்கமல நெற்றியனே போற்றி!

தென்னவர்கோன் ஆகிய சிவனே போற்றி!

கங்கை நீர் சடையானே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 54

அஞ்சு முகம் உடையாய் போற்றி!

அமராவதி தமையனே போற்றி!

நெஞ்சு உள்ளே நிறைந்தாய் போற்றி!

நீலமிடற்று ஆனை முகனே போற்றி!

மென்சொல்லாள் பாகம் வைத்தாய் போற்றி!

மேலோர்க்கும் தேவாய் நின்றாய் போற்றி!

கஞ்சம் அரி நின்பாடம் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 55

செந்தமிழ் மொழி செல்வனே போற்றி!

சென்று அடைந்தார் தூக்கும் செல்வனே போற்றி!

கந்தம் மணம் கமழும் கண்ணியனே போற்றி!

கலையோன் தலையைக் கதித்த கோவே போற்றி!

நிந்திக்கும் மனத்தவர்க்கு அரியே போற்றி!

நேசமுடன் அடைந்தார் நிலையே போற்றி!

தந்தாய் அருள் சுற்றித் தொழும் கோவே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 56

செற்றார் புரமெரித்த சிவனே போற்றி!

தேவர் அமராவதி தெய்வனே போற்றி!

பற்றார் பதியின் பதிவே போற்றி!

பாம்பணைந் தோர் கண்டத் தானே போற்றி!

முற்றார் முனியினர் மூலமே போற்றி!

முக்கண் அருள் செய்த மூர்த்தியே போற்றி!

கற்றார் கலையும் களையே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 57

சக்கர பதிக்கும் தகப்பனே போற்றி!

சதுர்ப்பீட மூர்த்தியே போற்றி!

பக்கம் அமர்ந்த பகவனே போற்றி!

பராசக்தி தானே பதியே போற்றி!

பிக்கு அடியார் பேணும் பெருந்தேவே போற்றி!

பிண்ணாக்குறள் கழற்கோவே போற்றி!

நிக்கம் வெடும் நெருப்பே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 58

கூத்தாடுங் கூத்தனே போற்றி!

கூறு கூறாய் நின்ற கோவே போற்றி!

வேத்தாடுங் கொண்டைவ முகத்தே போற்றி!

வேதமும் அங்கமும் ஆனீ போற்றி!

ஏத்தாடுங் கண்ணே எடுத்தே போற்றி!

இன்பமே போற்றி! இறையே போற்றி!

காத்தாடுங் கருணையே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 59

வீணையை வாசிக்கும் விளக்கே போற்றி!

வேண்டிய பொருளும் விநையே போற்றி!

பூணியுடன் கூடிய புண்ணியனே போற்றி!

புண்ணியவாய் அருள் புரியும் புனிதே போற்றி!

நீணமே நின் நாமம் நெகிழ்ந்தே போற்றி!

நிஷ்கள்ளன் பூணாய் நின்றே போற்றி!

காணியவுள் ஒளிறும் கதிரே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 60

காலம் மூன்றும் அறிவே போற்றி!

கண்ணன் அருள் நல்கும் கண்ணே போற்றி!

மாலும் அரனும் அறியா மைந்தே போற்றி!

மலையான் மடந்தை மணாளே போற்றி!

நீலமே போற்றி! நெடியே போற்றி!

நீதி நெறியும் நிகழ்ந்த நிலையே போற்றி!

காலனும் அஞ்சும் கலையே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 61

வட்ட மந்திர ஒலியே போற்றி!

வாதவூர்க்கு அருள் புரிந்தே போற்றி!

கிட்ட அடி யார் தம் கேசவே போற்றி!

கீர்த்திமலர் சூடும் கேதணே போற்றி!

பட்ட பிடி அரவம் பாம்பே போற்றி!

பார்வேண்டுசற் பால் பண்ணே போற்றி!

சித்த ம் வைத்து விகித் சிவனே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 62

வித்துருக்கும் நல்ல விதையே போற்றி!

வேகம் கெடா வருள் வேட்கையே போற்றி!

சத்துருக்கும் கருணைச் சாரனே போற்றி!

சார்வார்க்கு அருள் செய்த சாதகே போற்றி!

சித்துருக்கும் ஞானச் சிதறே போற்றி!

சிவையோடு உடன் இருக்கும் சிவனே போற்றி!

பத்துருக்கும் பண்ணப் பண்ணே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 63

கிரிசைகட்கு அருள் செய்யும் கேசவே போற்றி!

கீர்த்திமிக கையும் மனத்தே போற்றி!

விரிசையாம் மலர் கொண் டாழ்ந்த விகிர்தே போற்றி!

வேட்கையுடன் அடைந்தார் வெல்லும் கோவே போற்றி!

பிரிவு தரும் பொறுப்பில்லா பெருமாளே போற்றி!

பேணிய எம் பெருங்கருணைப் பெருந்தெய்வே போற்றி!

கிரவு கிரு கின்ற கீர்த்தியே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

பாடல்: 64

போற்று இசைத்து உன்னடி பரவ நின்றாய் போற்றி!

புண்ணியனே, நண்ணல் அரியாய் போற்றி!

ஏற்று இசைக்கும் வான்மேல் இருந்தாய் போற்றி!

எண்ணாயிரம் நூறு பெயராய் போற்றி!

நால் திசைக்கும் விளக்காய நாதா போற்றி!

நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி!

காற்று இசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

சான்றிதழ் பெற - வாய்மொழித்தேர்வு முறை

  1. தேர்வுக்கு கட்டணம் ஏதும் இல்லை. சான்றிதழ் பெறவும் கட்டணம் இல்லை.
  2. மாணவர்கள் முதல் (1 to 34 ) முப்பத்தி நான்கு பாடல்கள் கட்டாயம் படிக்கவேண்டும். இதில் ஏதேனும் பத்து பாடல்கள் கேகப்படும். எந்த பாடல் கேட்டாலும் பார்க்காமல் பாடிக்காட்ட அல்லது ஒப்புவிக்க வேண்டும். குறைந்தது பத்து பாடல்கள் ஒருவருக்கு கேக்கப்படும். ஆசிரியர் கேட்ட பாட்டினைத்தான் ஒப்புவிக்க வேண்டும்.
  3. அடுத்துள்ள (35to 64) பாடல்களில் ஏதேனும் ஆறு பாடல்கள் மாணவர் விருப்பப்படி பார்க்காமல் பாடி அல்லது ஒப்புவிக்க வேண்டும்.
  4. படலுக்கான விளக்கம் சொல்ல வேண்டியது இல்லை.
  5. மாணவர் பாடிய அல்லது ஒப்புவித்ததில் ஆசிரியருக்கு திருப்தி இல்லையெனில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட மாட்டது. அவர்கள் மீண்டும் அடுத்த முறை நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
  6. மாணவர் தேர்ச்சி செய்வது - தேர்வுநடத்தும் ஆசிரியர் பொறுப்பு. அவரின் முடிவே இறுதியானது.
  7. வெளிநாடு, அல்லது வேறுமாநில மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடல்கள் பாடிகாட்டி சான்றிதழ் பெறலாம். ஆன்லைன் தேர்வுக்கு 9751324644 என்ற எண்ணிற்கு அழைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Foundation Logo

Dedicated to preserving Hindu heritage through education, spiritual guidance, and community service.

Contact Us

  • location_on 1172 Kainankarai, Mathur Industrial Estate Post, Pudukkottai District, Trichy- Pudukkottai Road, Near to Mathur Police Station, TRICHY 622 515. Tamil Nadu State. INDIA.
  • email hinduerfoundation@gmail.com
  • phone +91 04339 299739 / +91 70941 24644 / +91 96599 65205

Follow Us

© 2024 Hindu Educational and Religious Foundation. All Rights Reserved.

Designed by AhopeZ Innovations.